அண்ணே நீங்க எப்ப வாய்ப்பு கொடுத்தாலும் நம்ம பட டைட்டில் இதுதான்.. விஜய்க்கு அட்லீ கொடுத்த சர்ப்ரைஸ்!

விஜய் அட்லீ கூட்டணி என்றால் வசூல் கூட்டணி என்று கோலிவுட் வட்டாரங்களில் பெயர் உள்ளதாம். விஜய்யும் அட்லீயும் ஒரு படத்தில் இணைந்து விட்டால் அந்த படத்தின் எதிர்பார்ப்பு மலையளவு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகும் படங்களை வாங்கி வெளியிடும் தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் தொடர்ந்து இவர்களது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் நிலைமைதான் கவலைக்கிடமாக உள்ளது.

அட்லீயின் கவனக்குறைவால் விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது. ஆனால் இனி அப்படி செய்ய மாட்டேன் என விஜய்க்கு அட்லீ வாக்கு கொடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் விஜய் அட்லீ கூட்டணியில் அடுத்த படம் ஒன்று உருவாக உள்ளது ஏறக்குறைய உறுதியான தகவல் தான்.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்திற்கு பெயர் வேறு வைத்துவிட்டாராம் அட்லீ. தெறி திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆனதை சமூக வலைதளங்களில் அட்லி கடந்த நான்கு வருடங்களில் கொண்டாடாத அளவுக்கு இந்த முறை கொண்டாடியுள்ளார்.

இதிலிருந்தே விரைவில் இருவரும் இணைய உள்ளனர் என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் விஜய் படங்களில் தனக்கு தெறி படம் மிகவும் ஸ்பெஷலான படம் என குறிப்பிட்டு அடுத்த படத்திற்கு வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அட்லீயோ விரைவில் என பதிலளித்திருந்தார். இதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் வரும் அடுத்த படத்தின் தலைப்பு “வெறி” என்று இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாக அட்லீ வட்டாரங்களில் காதைக் கடிக்கின்றனர்.