தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் மாஸ்டர் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் ரிலீஸ் தேதியுடன் உறுதி செய்துள்ளனர்.

கடந்த 8 மாதமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தடுமாறி வந்த மாஸ்டர் திரைப்படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர்.

இதுவரை விஜய்யின் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.

மேலும் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தமிழ் மொழியிலேயே மாஸ்டர் படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் வரும் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் ரிலீஸ் தேதியை வெளியிட உபயோகித்துள்ளனர்.

அதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இரத்தக் களரியில் ஒருவரை ஒருவர் கழுத்தை பிடித்துக் கொள்ளும் வெறித்தனமான போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.