தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி போனது, ஆனால் அடுத்த மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது தற்பொழுது உறுதியும் செய்யப்பட்டுவிட்டது.

மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இப்படம் U/A சென்சார் சான்றிதழ் பெற்றது என்ற புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ட்ரைலரை நடிகர் அர்ஜுன் தாஸ் பார்த்து விட்டதாகவும், அதில் நடிகர் விஜய் கூறும் ஒரு பஞ்ச் டைலாக் வேற லெவலில் இருக்கும் என பேட்டியில் அப்போது தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி மாஸ்டர் பொங்கல் அன்று வெளியாகும் என கூறப்படும் நிலையில், இப்படத்தின் ட்ரைலர் புத்தாண்டில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.