தளபதி விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா, ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் புகைப்படம்!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் இவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகியாக ஆனார்.

கடைசியாக இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த திரைப்படம் தான் கத்தி, இப்படம் அப்போது ரசிகர்களை பெரியளவில் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

மேலும் அப்போது நடந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே பரவி வருகிறது.