தளபதி 65 அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பிரபல நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கவுதம் மேனன் – அஜித் கூட்டணியில் உருவான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்திருந்த அருண் விஜய், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.