தளபதி 65 படத்தில் உறுதி செய்யப்பட்ட வில்லன் இவர் தானா ! ரசிகர்கள் எதிர்பார்க்காத கூட்டணி..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் எதிர்பார்ப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், மிக பெரிய வெற்றியடைந்துள்ளது.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் தளபதி 65. இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து வேறு எந்த ஒரு தகவலும் வெளியாகும் இருக்கும் நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ள வில்லன் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

ஆம், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக பல தகவல் இணையத்தில் பரவி வருகிறது.