வெள்ளித்திரையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு கௌரவமாக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர்தான் கௌதம் மேனன் இவரது இயக்கத்தில் ஜோஸ்வா,இமைபோல் காக்க, துருவநட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கிறது.

மேலும் இயக்குனர் கௌதம் மேனன் தனுஷ்,சூர்யா,அஜித்,மாதவன் போன்ற எல்லா நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார்.ஆனால் இதுவரை தளபதி விஜயுடன் இன்னும் ஒரு திரைப்படத்தில் கூட இணைந்து பணியாற்றவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் பற்றி கூறியுள்ளதாக தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

அதில் நடிகர் விஜயுடன் இணைந்து கண்டிப்பாக ஒரு திரைப்படத்திலாவது பணிபுரிய வாய்ப்புகள் இருக்கிறது என்று அழுத்தமாக கூறியுள்ளாராம்.

மேலும் இந்த தகவலை அறிந்த விஜயின் ரசிகர்கள் பலரும் கௌதம்மேனன் தளபதி 66 வது படத்தில் கூட பணியாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறிவருகின்றனர்.

ஆனால் இயக்குனர் கௌதம் மேனன் வாய்ப்புள்ளது என்று தான் அழுத்தமாக கூறியுள்ளாராம் ஆனால் எந்த படம் என்றுதான் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.