தீபிகா படுகோனேவிடம் கோரிக்கை வைத்த விஜய் ரசிகர்கள்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனேவிடம் விஜய் ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் இன்னும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஆலிவுட்டிலும் தனது எல்லைகளை விரிவுபடுத்திய இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தவர்.

தீபிகா தனது படப்பிடிப்பிலிருந்து வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பின்னணியில், விஜய்யின் “வாத்தி கம்மிங்” பாடல் இசைக்கிறது. அதை அவர் “பி.டி.எஸ் ஆப் பி.டி.எஸ்” என்ற தலைப்பில் தலைப்பிட்டுள்ளார். இது பல்வேறு தருணங்களில் கெத்தாக நடக்கும் அழகான பெண்ணை காட்டுகிறது. பாடலின் இசையுடன் தீபிகா நடப்பது கச்சிதமாக பொருந்திப் போகிறது.

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் தீபிகாவிடம், விஜய்யுடன் விரைவில் இணைந்து திரையில் நடிக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.