தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர் நடிகர் சாந்தனு. இவர் சிறுவயதிலேயே சினிமாவிற்கு வந்தாலும் சினிமாவில் இன்று வரை பெரிய இடத்தை பிடிக்கவில்லை என்று கூறலாம்.

சாந்தனு கதாநாயகனாக நடித்த எந்த ஒரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரிய அளவிற்கு வசூலை பெறவில்லை. இதனால் சாந்தனு படங்களில் துணை நடிகராக நடிக்க ஆரம்பித்தார். இவர் துணை நடிகராக நடித்து கடைசியாக வெளியான வானம் கொட்டட்டும் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் துணை நடிகராக நடித்து, இந்த திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இப்படத்தினை சாந்தனு முழுவதுமாக நம்பியிருந்த சாந்தனுவுக்கு அதிர்ஷ்டவசமாக முன்பே ஒரு வெற்றி கிடைத்துள்ளது.

சாந்தனு நடிப்பில் தற்போது வெளியான பாவ கதைகள் எனும் வெப் சீரிஸ் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் இடம் பிடித்துள்ளார்.

நடிகர் விஜய் பொருத்தவரை திறமையுள்ள நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது நடிப்பை பார்த்துவிட்டு தனது கருத்தையும் பாராட்டையும் தெரிவிப்பதில் தவறியதில்லை என்றே கூறலாம்.

சமீபத்தில் சாந்தனு நடித்த பாவ கதைகள் வெப் சீரிஸ் பார்த்துவிட்டு நடிகர் விஜய் சாந்தனுக்கு போன் செய்து உனக்குள் இத்தனை திறமைகளை வைத்துவிட்டு ஏன் வெளிப்படுத்தாமல் இருந்து விட்டாய். பட்டையை கிளப்பி இருக்கீங்க நண்பா என பாராட்டையும் தெரிவித்துள்ளதாக சாந்தனு பெருமிதத்துடன் கூறியுள்ளார்.