விஜய்யின் படத்துக்கு கொக்கி போட்ட இளம் இயக்குனர்.. கதை கூட சொல்லிட்டாராமே!

மாஸ்டர் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார். இதற்கான பூஜை சமீபத்தில் சன் ஸ்டூடியோவில் நடந்தது. மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு எலக்சன் முடிந்ததும் தொடங்க உள்ளதாம்.

தளபதி விஜய் இந்த ஊரடங்கு சமயத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டாராம். அந்த வகையில் தளபதி 65, தளபதி 66 போன்ற படங்களின் இயக்குனர்களை தேர்வு செய்து விட்டார். தளபதி 65 நெல்சன் என்பது அனைவருக்குமே தெரியும்.

அதனைத் தொடர்ந்து தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க மீண்டும் தன்னுடைய ஆஸ்தான இளம் இயக்குனருடன் கைகோர்க்க உள்ளாராம் விஜய்.

அவர் வேறு யாரும் இல்லை. நம்ம ஆல் இன் ஆல் அட்லீ தான். தற்போது அட்லீ ஷாருக்கான் படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி சம்மரில் ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.

அதற்குள் விஜய் தளபதி 65 படத்தை முடித்துவிட்டு தளபதி 66 படத்தின் பாதி வேலைகளை முடித்து விடுவாராம். அதன்பிறகு தளபதி 67 படத்திற்காக மீண்டும் அட்லீ மற்றும் விஜய் கூட்டணி இணைய உள்ளதாம்.

அட்லீ ஏற்கனவே தளபதி 67 படத்திற்கான ஒன்லைன் கதையை கூறி விட்டதாகவும், ஷாருக்கான் படத்தை முடித்துவிட்டு வந்த பின்னர் இந்த படத்திற்கான திரைக்கதை எழுத உள்ளதாகவும் சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூடியூப் வீடியோவில் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.