விஜய் படத்திற்கு கதை ரெடி.. இது தான் அந்த கதை, ஓபனாக தெரிவித்த கௌதம் மேனன் – செம ஸ்டோரி.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் மேனன். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக திரையுலகில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கியுள்ள கௌதம்மேனன் தளபதி விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் இவருடைய ஆசை இன்னும் நிறைவேறவில்லை.

இவர் விஜய்யை வைத்து யோகம் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படம் தொடங்காமல் போய்விட்டது. இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படத்தின் கதை என்ன என்பதை போவதாக தெரிவித்துள்ளார். அதாவது இது ஸ்பை திரில்லர் மூவி. இப்படத்தில் ஒரு விமான விபத்து நடைபெறும். இந்த விபத்தில் காதலியை பலி கொடுத்த ஒருவர் இந்த விபத்தை ஏற்படுத்திய 3 பேரை தேடும் பணியில் இறங்குகிறார். பின்னர் அவர் எப்படி சிஐஏவில் இணைந்து டாப் ஏஜென்ட்டாக மாறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை என கூறியுள்ளார். கௌதம் மேனன் இந்த படத்தின் கதையை ஓப்பனாக கூறியிருப்பதால் விஜய் மீண்டும் இப்படத்தில் நடிப்பார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.