விஜய் படமெல்லாம் ஓடாதுங்க என்ற தயாரிப்பாளர்.. இப்போ தளபதி பட வாய்ப்புக்காக காத்திருக்கும் சோகம்!

விஜய் படத்தை சில வருடங்களுக்கு முன்பு இழிவாக பேசிய தயாரிப்பாளர் ஒருவர் தற்போது விஜய் படத்தை கேட்டு அவருடைய மேனேஜரிடம் நட்பு வளர்த்து வரும் செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் இன்றைய ஹாட் டாபிக்.

ஒரு காலத்தில் விஜய் படங்கள் மற்ற மொழிகளில் படுதோல்வியை சந்தித்தன என்பது உண்மைதான். ஆனால் கடந்த சில வருடங்களில் விஜய்யின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபரிதமாக உள்ளது.

எந்தெந்த இடங்களில் விஜய் படம் படுதோல்வியை சந்தித்ததோ தற்போது அங்கெல்லாம் 20 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. அந்தவகையில் கேரளா கர்நாடகாவை தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவும் விஜய்யின் கைவசம் வந்துள்ளது.

கடந்த சில வருடங்களில் வெளியான தமிழ் நடிகர்களின் படங்களில் விஜய் படங்களே அதிக வசூல் செய்துள்ளதாக தெலுங்கு வட்டார பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி வெளியாகி கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

அந்த வகையில் பைரவா படத்திற்கு முன்பு வரை விஜய்க்கு தெலுங்கில் பெரிய அளவு மார்க்கெட் இல்லை. இதன் காரணமாக விஜய் படங்களை தெலுங்கில் அதிகமான திரையரங்குகளில் வெளியிட கூடாது என தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு என்பவர் வினியோகஸ்தர்களுக்கு கட்டளை போட்டுள்ளார்.

ஆனால் கடந்த சில வருடங்களில் வெளியான விஜய்யின் மெர்சல், பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் நினைத்ததைவிட அதிக வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தளபதி 65 படத்தின் விநியோக உரிமையை தனக்கு கொடுக்கும்படி விஜய்யின் மேனேஜரிடம் தொடர்ந்து கேட்டு வருகிறாராம். தளபதி 65 படத்தின் விநியோக உரிமையை வாங்கினால் அப்படியே தளபதி விஜய்யிடம் கால்ஷீட் வாங்கி விடலாம் என கணக்கு போட்டுள்ளாராம்.

வாழ்க்கை ஒரு வட்டம்னு தளபதி சரியாத்தான் சொல்லிருக்காரு!