விஜய் பற்றிய கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லி தெறிக்க விட்டுள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்!

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கே ஜி எப்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தினை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கினார். தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ள இவர் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது ரசிகர் ஒருவர் விஜய் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விஜய் என்றால் பவர் ஹவுஸ் என ஒரே வார்த்தையில் பதிலளித்து தெறிக்க விட்டுள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினால் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் விஜய் மற்றும் பிரஷாந்த் நீல் கூட்டணியில் படம் உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.