வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பிராவோ!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக வந்தது மாஸ்டர்.

கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.’குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகங்கள். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். பவர் ப்ளேயில் தீபக் சஹர் ஓவரில் பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து சிக்கினார். பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பு 26 ரன்கள் எடுத்தது. சென்னையின் பிடியை அதன்பின் பஞ்சாப் வீரர்களால் தகர்க்கவே முடியவில்லை.


இதற்கிடையில் தமிழக வீரர்களாக ஷாருக்கான், முருகன் அஷ்வின் இருவரும் கொஞ்சம் பார்ட்னர் ஷிப் பில்ட் செய்தனர். பிராவோ பந்துவீச்சில் முருகன் அஷ்வின் சிக்கினார். இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ மைதானத்தில் ‘வாத்தி கம்மிங்’ மூவ்மெண்ட் போட்டார். பிராவோ நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.