தம்பி, ஏற்கனவே தளபதி 66-க்கு துண்டு போட்டாச்சு, இடத்தை காலி பண்ணுங்க.. கெத்து காட்டும் இயக்குனர்..

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து மே முதல் வாரம் சென்னையில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட இருந்தது.

ஆனால் கொரானா சூழ்நிலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 90 சதவீத பாதிப்புகள் குறைந்த பிறகு படப்பிடிப்பை தொடங்கலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விஜய் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கிடைத்தன.

இருந்தாலும் விஜய் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான இயக்குநர்களையும் கதைகளையும் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக குறைந்தது வாரத்தில் இரண்டு இயக்குனர்களாவது அவரிடம் கதை சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் தளபதி 66 படத்திற்கான இயக்குனர்களை தேர்ந்தெடுத்து வருகிறார் விஜய். அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டபோதுதான் தெலுங்கு தேசத்திலிருந்து ஒரு கமர்சியல் இயக்குனர் விஜய்யிடம் கதை கூறியுள்ளார்.

இதுவரை தமிழ் இயக்குனர்களிடம் மட்டுமே பணியாற்றி வந்த விஜய் முதன்முதலாக ஒரு நேரடி தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளார். அவரின் பெயர் வம்சி பைடிபல்லி. கார்த்திக் நடித்த தோழா, மகேஷ்பாபு நடித்த மகரிஷி போன்ற படங்களை இயக்கியவர் இவர்தான். இந்த இரண்டு படங்களுமே சூப்பர்ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

விஜய்யிடம் இந்த கதையை சொல்ல வைத்ததே தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ என்பவர் தான். விஜய்யின் வளர்ச்சியைத் தெரிந்து கொண்டு நேரடியாக விஜய்க்கு தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுப்பதாக விஜய்க்கு உறுதி அளித்துள்ளாராம்.

இதனால் கண்டிப்பாக விஜய் தளபதி 66 படத்திற்கு வம்சி பைடிபல்லி என்பவருக்கு தான் வாய்ப்பு கொடுப்பார் என இப்போது அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த படத்தை 2022ஆம் ஆண்டு தீபாவளிக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர்.